எகிப்தில் புகையிரத விபத்தில் 35 பேர் பலி!
Saturday, March 27th, 2021
எகிப்தி;ல் இரண்டு புகையிரதங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தி;ல் 35க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
எகிப்தின் தென்பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடம்புரண்ட பெட்டிகளையும் உள்ளே சிக்குண்டுள்ள பயணிகளையும் எகிப்திய ஊடகங்கள் காண்பித்துள்ளன.
சிலர் மயக்கமடைந்த நிலையில் காணப்படுவதையும் சிலர் குருதிக்காயங்களுடன் காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.
Related posts:
மோட்டார் வாகன மாசு சோதனைகளில் ஜெர்மனி அரசு அலட்சியம்!
வாக்கெடுப்பு முடிவுகள் செல்லுபடியாக ஹங்கேரி அரசியல் சாசனம் திருத்தப்படும் - பிரதமர் விக்டோர் ஒர்பான்...
கட்சித் தலைவராக ராகுல் காந்தி கடமைகளை பொறுப்பேற்றார்!
|
|
|


