72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம்!
Thursday, March 25th, 2021
நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் ஏப்ரல் 5 திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கொழும்பு பதில் பிரதான நீதவான் ஆர்.எம். எஸ்.பி சந்திரசிறி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருடந்த இடமாற்றம் தொடர்பில் இன்று வரையில் மேன்முறையீடுகளை முன்வைக்க முடியும் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
00
Related posts:
நாடாளுமன்றில் இடைக்கால கணக்கு அறிக்கை நிறைவேற்றம்!
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மீண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகரிப்பு!
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் - இராஜாங்க அமைச்சர்கள் கடமைகளை பெறுப்பேற்பு!
|
|
|


