தலைமன்னார் பேருந்து – புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!
Monday, March 22nd, 2021
தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி மதியம் தனியார் பேருந்தும் புகையிரதம் விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை குறித்த பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சர்வமத தலைவர்கள் அரசியல் பிரதி நிதிகள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி மதியம் தனியார் பேருந்தும் புகையிரதமும் மோதி ஏற்பட்ட விபத்தில் தலை மன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த 14 வயதுடைய பாலச்சந்திரன் தருண் என்ற மாணவன் உயிரிழந்த தோடு, மாணவர்கள் பொது மக்கள் என 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விபத்திற்கு நீதி கோரி இன்றையதினம் குறித்த போராட்டம் இடம் பெற்றது. இன்று காலை 7.45 மணியளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமானது.
இதன் போது பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சர்வமத தலைவர்கள் அரசியல் பிரதி நிதிகள் ஆகியோர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவை வரை பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இதன்போது புகையிரத கடவைக்கான தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்க கோரியும் குறிப்பாக வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்தி, குறித்த புகையிரத கடவையில் பொலிஸாரின் கண்காணிப்பு இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106