தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
Wednesday, March 17th, 2021
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஸெனெக்கா என்ற கொரோனா தடுப்பூசி பாவனை இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குறித்த தடுப்பூசியை நாம் பெற்றுக்கொள்ளவில்லை.
இதனால் தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண இது பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம் ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இலங்கைக்கு தருவிக்கப்படவில்லை. இதனால், தடுப்பூசியை பெற்றுக் கொள்வது பற்றி எவரும் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சையில் தோல்வி : கிணற்றுக்குள் விழுந்து மாணவி உயிரிழப்பு?
அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறை - ஆறு ஆண்டுகளில் 19 ஆயிரத்து 768 சம்பவங்கள் பதிவு - தேசிய சிறு...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வழங்கப்பட்டதன் பின்னரே இலங்கையின் பொருளாதாரம் மீட்சி அடையும் ...
|
|
|


