சுகாதார வழிகாட்டல்களை மீறிய 176 பேருந்துகளின் வழித்தட அனுமதிப் பத்திரங்கள் இரத்து!

Tuesday, March 16th, 2021

மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற 176 பேருந்துகளின், வழித்தட அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நேற்றுமுதல், 5 ஆம், 11 ஆம் மற்றும் 13 ஆம் தரங்களுக்கான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில், சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிப்புகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


செப்பனிடப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பில் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் கண்ணன்...
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் - இராஜாங்க அமைச்சர் தி...
உயர்தர பரிட்சை முடியும் வரை தொடர்ச்சியாக மின்சாரம் இன்றேல் சட்ட நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழுவ...