தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்கள் ஸ்தாபிப்பு – தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம்!

Tuesday, May 4th, 2021

கொரோனா பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்களை ஸ்தாபிக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோருக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தொழில் அமைச்சர், தொழிற்சங்கத்தினர் மற்றும் முதலாளிமார் ஆகியோர் இதற்கு முன்னர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய செயற்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் ஆரம்பமானதுமுதல் இந்த வருடத்தின் கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், 12,ஆயிரம்முதல் 14 ஆயிரத்திற்கு இடைப்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தொழில் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்..

எவ்வாறாயினும், அவர்களில் 11 ஆயிரம் பேருக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நீர் மற்றும் மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு பொது பயன்பாட்டு ஆணை...
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவ...
பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம் - சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கும் கல்வி அமை...