இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை – இந்தியா!
Monday, March 15th, 2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான குழுக்கள் முன்வைத்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா என்பது தொடர்பில் இந்தியா எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அத்துடன் குறித்த தீர்மானத்தின் மீது இந்தியா உறுதியற்றதாகவே இருந்தது. எனினும் 13 வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த இந்தியா இலங்கையை வலியுறுத்தியது.
மேலும் தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்த நாடுகளில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் கியூபா ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை - பேக்கரி உரிமையாளர் சங்கம்!
சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு...
|
|
|


