வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படும் – இராணுவ தளபதி நம்பிக்கை!
Saturday, March 13th, 2021
வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
அந்தவகையில் குறித்த இரண்டு கோரிக்கைகளும் எதிர்வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும் என தான் நம்புவதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் போது வெளிநாட்டில் இருந்துவரும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்!
பராமரிப்பு நிலையங்களில் உள்ள பிள்ளைகள் தொடா்பில் கல்வியமைச்சரின் கோரிக்கை!
பெரும்பான்மை பெறவில்லை - விஜயிடம் ஆளுநர் அர்லேகர் சுட்டிக்காட்டு!
|
|
|


