‘பேருந்தில் எதிர்காலத்திற்கு’ – நூலகம் அற்ற பாடசாலைகளுக்கு நூலகங்களை வழங்கி வைத்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Saturday, March 13th, 2021

போக்குவரத்து பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை நூலகங்களாக மீள புதுப்பிக்கப்பட்டு நூலகங்கள் அற்ற பாடசாலைகளுக்கு வழங்கும் ‘பேருந்தில் எதிர்காலத்திற்கு’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அதற்கமைய 20 மாவட்டங்களில் நூலக வசதியற்ற 20 பாடசாலைகளுக்கு இவ்வாறு பேருந்து நூலகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

‘பேருந்தில் எதிர்காலத்திற்கு’ திட்டத்தின் முதலாவது கட்டம் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சிறுவர் தினத்தன்று செயற்படுத்தப்பட்டது.

அதற்கமைய அன்றையதினம் 5 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளுக்கு பேருந்து நூலகங்கள் வழங்கப்பட்டன.

தற்போது பிரதமரின் தலைமையில் 20 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளுக்கு இவ்வாறு பேருந்து நூலகங்கள் வழங்கப்பட்டதுடன், 25 மாவட்டங்களுக்கு இந்த எண்ணக்கருவிற்கமைய பேருந்து நூலகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, வாசிப்பு என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும். அதன் மூலம் பிள்ளைகளுக்கு சமூக, பொருளாதார, அரசியல் அறிவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன்  இது பிள்ளைகளை வாசிப்பிற்கு பழக்குவதற்கு உந்துததலாக அமையும்.

நாம் இன்றைய சூழலுக்கு பொருத்தமான புத்தகங்கள் மற்றும் இணைய வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்திருந்தார்.

அதுபோன்று இவ் நிகழ்வில் கலந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பாவனைக்கு உட்படுத்த முடியாத பேருந்துகள் இரும்பிற்காக விற்பனை செய்த நிலையே காணப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் அவ்வாறான பேருந்துகள் கடலில் போடப்பட்டன.

ஆனால் இ.போ.ச. ஊழியர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனால் இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து பாவனையில் இருந்து நீக்கப்படும் பேருந்துகள் முழுமையான நூலகங்களாக மாற்றப்படுகின்றன.

நூலக வசதியற்ற பாடசாலைகளுக்கு நாம் இப்பேருந்துகளை பெற்றுக் கொடுக்கிறோம். அதில் இலவச இணைய வசதியும் உள்ளடங்குகிறது. மேலும் 34 பேருந்துகள் இதுவரை இதேபோன்று புதுப்பிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தமை குறிபபிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106