கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!
Monday, March 8th, 2021
அனைத்து அரச ஊழியர்களும் இன்றுமுதல் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர் ஜி. ஜி.ரத்னசிறியின் கையொப்பத்துடன் அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொவிட் -19 பரவல் காரணமாக அரச பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், சுகாதார வழிகாட்டுதல்களுடன் அரச அலுவலகங்களின் பணிகளை முன்னெடுக்க தேவையான பணியாளர்களை மாத்திரம் அழைக்கும் அதிகாரம் நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், இன்றுமுதல் வழக்கம் போன்று அனைத்து அரச ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதனடிப்படையில் இன்று ஊழியர்கள் தமது கடகைளுக்காக அலுவலகங்களுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் - அமைச்சரவை அங்கீகாரம்!
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழு மற்றும் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் எதிர்வரும் 3 வா...
அமரர் கந்தசாமி பூவம்மாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
|
|
|
உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் - அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக...
2.8 பில்லியன் ரூபா தேவை என பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு - பொலிஸாரின் தேர்தல் செலவால் தேர்தல்கள் ஆணைக...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - யோசனைகளில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ர...


