ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
Monday, March 8th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனித கொலை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம்திகதியன்று நாட்டின் 8 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பான 8 அறிக்கைகளும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட 241 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரையில் சட்டமா அதிபர் காத்திருந்தார். தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தநிலையில் சட்டமா அதிபரால் 12 சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106