சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, March 7th, 2021
மாகாணசபை தேர்தல் தொடர்பில் தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணாகசபை தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறுபட்ட விவாதங்கள் தற்போது எழுந்துள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதேநேரம் மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறைமைப்படி எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு - சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!
குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது!
வடக்கில் இராணுவம் இருக்க மக்கள் விரும்புகின்றனர் கூட்டமைப்பு மட்டுமே அகற்றக் கோருகிறது - முன்னாள் அம...
|
|
|


