இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது – பிரித்தானியா அறிவிப்பு!
Sunday, March 7th, 2021
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பார்ப்படுத்துமாறு கோரி 13,500 க்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் அனுப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஐ.சி.சி.யை நிறுவிய ரோம் சட்டத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் மூலம் மட்டுமே நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என்பதுடன் அத்தகைய பரிந்துரையை வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளே செய்யலாம் என்றும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
அதுநேரம் பொறுப்புக்கூறல் மற்றும் இடைக்கால நீதிக்கு அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினாலும், பிரித்தானியா தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106