உடல்களை அடக்கம் செய்ய வேறு பிரதேசங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது – ஆராய்ந்துவருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

Friday, March 5th, 2021

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அந்த பகுதி மக்கள் உட்பட பல தரப்பினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் வேறு பகுதிகள் குறித்தும் ஆராய்ந்துவருவதாக இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதே தற்போதைக்கான தெரிவாக உள்ளபோதிலும் அரசாங்கம் வேறு இடங்கள் குறித்தும் ஆராய்ந்து வருவதாகவும் இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் ஏனைய பகுதிகள் குறித்தும் ஆராய்ந்துவருகின்றோம் எனினும் இரணைதீவே தற்போது எங்கள் தெரிவாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடியவிரைவில் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள அவர் வழிகாட்டுதல்கள் பூர்த்தியானதும் நடைமுறைப்படுத்தும் முடிவுகளை 48 மணித்தியாலத்தில் எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந...
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம் - இறக்குமதியாளர்கள் சங்கம் தெ...
இலங்கை மக்களுக்கு இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்க தயார் - சீன ஜனாதிபதி இலங்கையின் அரச தலைவரிடம் ...