காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு!

Sunday, June 11th, 2017

காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்று கொள்ளும் நோக்கில் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவது குறித்து எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.குறித்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, காணாமல் போனோர் தொடர்பாக அலுவலகம் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கும் பொறிமுறையின் ஒரு அம்சமான காணாமல் போனோர் தொடர்பான அலுவகத்தை அமைப்பது குறித்த சட்டவரைபு, கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

எனினும் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணி விடுத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், சட்டத்திருத்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முச்சக்கர வண்டியில் இருவர் கார்களில் மூவர் மட்டுமே பயணிக்க முடியும் - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ர...
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்திற்கு எந்தவித கால...
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணையை வெளியட்டது கல்வி அமைச்சு - மூன்றாம் தவணை 20...