“கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்” – உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பயிற்சி பட்டறை!
Sunday, February 28th, 2021
கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் என்னும் பயிற்சி பட்டறை ஒன்று யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட்டது..
யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி பட்டறையின்போது அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் அவற்றிலிருந்து எவ்வாறு தம்மை விடுவித்து அரசியலில் பங்களிப்பை முன்கொண்டு செல்வது தொடர்பாக வளவாளர்களால் கருத்துரைக்கப்பட்டது.
ஜெசாக் நிறுவனம் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த பயிற்சி பட்டறையின்போது யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான தொடர்புகள் செய்திகளை வெளிக்கொணர்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையெ யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களை ஒன்றிணைத்த கட்டமைப்பு ஒன்றும் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106



