சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு!
Thursday, February 25th, 2021
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் – “எமது நாட்டின் பொருளாதாரத்தை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதுடன் கடன்களின் மூலமாக மாத்திரம் இதற்கான தீர்வுகளைத் தேடாது, கடனற்ற நிதி சேமிப்பின் மூலம் நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான தீர்மானங்களை மேற்கொண்டு, அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சர் இந்த நடவடிக்கைகளின் பிரதிபலன்களை எதிர்வரும் காலத்தில் நாட்டில் உள்ள அனைவரும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் எப்பொழுதும் கடன் பெற்று செயற்படுவதனால், செயற்பாடுகள் வெற்றியளிப்பதில்லை எனவும் ஒவ்வொரு வழியிலும் இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது. எனினும், தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்களில் அதன் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106