150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தம் – திருமண நிகழ்வு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி!

Monday, February 22nd, 2021

திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றின் புதிய திரிபு இலங்கையில் இனம் காணப்பட்டதை அடுத்து திருமண நிகழ்வுகளில் இந்த தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகள் மேற்படி மாற்றத்துக்கு பரிந்துரைத்திருந்தனர்.

எனினும் திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இல் இருந்து மாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வை நம்பி பல மண்டப உரிமையாளர்கள் உள்ளதால் இது தொடர்பில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்றத்தை இடைநிறுத்த தீர்மானிக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் வாழ்வாதராத்திற்கான கோரிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு இதனை மாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவு எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106