மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!
Sunday, February 21st, 2021
அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இழுபறியால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் திட்டங்களை செயல்படுத்துவதில் வனவிலங்கு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வீதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களின் பொறுப்பான அதிகாரிகள் ஒரு கூட்டு முடிவுக்கு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
காணிப் பயன்பாடு குறித்து முறையான திட்டமிடல் இல்லாதது மக்களின் தவறு அல்ல. காணிப் பிரச்சினைகள் உட்பட பல கிராமப்புற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும்போது அதிகாரிகள் களத்திற்குச் சென்று உண்மையான நிலைமையைப் பார்த்து முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களுக்கு சார்பான கொள்கை ரீதியான முடிவுகளை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன்மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்..
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106