சைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – நல்லூர் கோயில் வீதியில் சம்பவம்!
Saturday, February 20th, 2021
நல்லூர் கோவில் வீதியில் இன்று சனிக்கிழமை காலை சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில், நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் .
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் மரக்கறி கடை நடாத்துபவர் என்றும் இன்று காலை வீட்டில் இருந்து மரக்கறி வாங்க திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு சைக்கிளில் சென்றதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் பருத்தித்துறை திக்கம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியில் இருந்து விலகி கடலுக்குள் வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் கற்கோவலத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106