சேவையை நாடிவரும் மக்களுக்கு வீண் சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் – அதிகாரிகளிடம் யாழ் மாநகர முதல்வர் வலியுறுத்து!

Thursday, February 18th, 2021

தரப்பட்ட ஒரு வேலையை செய்து முடிக்காமல் அதற்கான காரணத்தை மற்றவர்கள் மேல் தட்டிவிடுகின்ற சாதாரண பணியாளர்களாக இல்லாமல் தந்த பொறுப்பினை செய்து முடிக்கின்ற ஆளுமை மிக்க பணியாளர்களாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் உங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களை குற்றம் சொல்லாமல் அவர்களையும் ஆளுமைமிக்க அர்பணிப்புமிக்க பணியாளர்களாக மாற்றுவதில் தான் உங்கள் ஒவ்வொருவரதும் ஆளுமை தங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக யாழ்.மாநகர சபையின் கிளைத்தலைவர்களுக்கும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நான் அரச தாபனக் கோவைகளை அறியாதவன். அது தொடர்பாக எனக்கு தெரியாதவற்றை நீங்கள் கற்றுத் தாருங்கள். நான் அதனைக் கற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் இவ் மாநகரத்தில் ஏதாவது ஒரு செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு நான் முயன்றால் அதனை தாபன  விதிகளுக்கு ஏற்றவகையில் எவ்வாறு செய்யலாம் என்று கூறுகின்ற அரச அதிகாரிகளாக நீங்கள் இருக்க வேண்டுமே தவிர அச் செயற்பாட்டினை செய்யவே முடியாது என்று முற்றாக மறுக்கின்ற அரச அதிகாரிகளாக இருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சட்டத்தை காட்டிசபைக்கு வருமானம் தரும் வழிமூலங்களை தடுக்காதீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நீங்கள் செய்கின்ற சேவைகள் மக்கள் சேவைகளாக மக்களைச் சென்றடைந்தால் அது பிழையும் அல்ல அதனால் எந்த பிரச்சனைகளும் உங்களுக்கு வரப்போவதில்லை. ஆனால் அது உங்களது சட்டப்பைகளை நிரப்பினாலே அது பிழை. பிரச்சனையான விடயம். என்றார். அதேநேரம் மாநகரத்திற்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள். இன்று இங்கு இருக்கின்ற நீங்கள் உங்களுடைய ஒரு தேவைகளுக்காக வேறு திணைக்களங்களுக்கு செல்லும் போது அங்கு இருக்கும் அதிகாரிகள் உங்களுக்கு வீண்சிரமங்களைத் தந்தால் உங்களுக்கு ஏற்படும் சலிப்பே எம்மைத்தேடி வரும் மக்களுக்கும் ஏற்படும். ஆகவே சோலை வரியாக இருக்கட்டும், தண்ணீர் இணைப்பாக இருக்கட்டும். அல்லது கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியாக இருக்கட்டும் அதற்குரிய விண்ணப்பப்படிவங்களைப் பெறவரும் மக்களுக்கு அவ் விண்ணப்பப்படிவங்களுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான ஒரு துண்டு பிரசுரத்தையும் வழங்குங்கள் என்றும் அதிகாரிகளுக்க அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106