ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்த நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுஅறிவிப்பு!

Thursday, February 18th, 2021

பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் பேருந்தில் ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்த நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என வெளியிடப்பட்ட அறிக்கை தற்பொழுதும் அமுலில் உள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

ஆனால் பெரும்பாலான பேருந்துகள் ஆசன எண்ணிக்கையை விட அதிகளவில் பயணிகளை ஏற்றிச்செல்கின்றன.

இதனால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகிறது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆசன எண்ணிக்கையின் அளவுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்வதால் பெருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தினை கருத்தில் கொண்டு அண்மையில் பேருந்து கட்டணத்தை 20 வீதத்தினால் அரசாங்கம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106