சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
Wednesday, February 17th, 2021
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களின் பாடசாலை அதிபர்கள் இன்று 17 ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகைதந்து அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் இன்று தபால் மூலம் அனுப்பப்படவுள்ளது.
அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஏற்பாட்டுப் பிரிவை தொடர்புகொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதிமுதல் 10 ஆம் திகதி வரை 4,513 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய குறித்த பரீட்சை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மாரல்ச்ச மாதம் முதலாம் திகதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ள நிலையில் இப்பரீட்சையில் இம்முறை பரீட்சையில் 622,352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித மேலும் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106