ஏப்ரல் 21 தாக்குதல் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டமா அதிபருக்கும் பிரதிகள் வழங்கப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, February 16th, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவ விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர் உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நேற்றையதின அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இந்த அறிக்கையின் பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஜனாதிபதி கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சட்டமா அதிபருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106