உருமாறிய பிரித்தானிக் கொரோனவால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!
Tuesday, February 16th, 2021
பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் நாட்டை முடக்கும் தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கொரோனா நோயாளர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய உத்தியோகத்தர் சங்கத்தின் சுற்றுலா துறைசார் மருத்துவர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட்-19 தொற்றின் காரணமாக மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிசெய்துள்ளார்
இலங்கையில் ஏற்கனவே 397 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மரணங்களுடன், இதுவரை 403 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106