இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்பணம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள திண்ம கழிவுகளைப் பயன்படுத்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் முதலாவது மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மாதம் 17 ஆம் திகதி ஹெந்தல கெரவலப்பிட்டிய பகுதியில் ஆரம்பிக்கப்பட்வுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மின் உற்பத்தி நிலையத்தில் தினமும் 700 டொன் கழிவுகளைப் பயன்படுத்தி 10 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்பகுதிகளிலிருந்து கழிவுகளை சேகரித்து மின் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்தள்ள அமைச்சர்  சேகரிக்கப்பட்ட கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தை முழு மாவட்டத்திலும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூடுதலாக உக்கி போகும் கழிவுகளைப் பயன்படுத்தி மாத்தறை மாவட்டத்தை மையமாக கொண்டு முதல் உயிர்வாயு மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில் மாத்தறை மாவட்டத்தின் கொடவில பகுதியில் கட்டப்பட்டுவரும் இந்த திட்டத்தில் தினமும் 40 டொன் கழிவுகளைப் பயன்படுத்தி தேசிய அளவில் 400 கிலோவாட் மின்சாரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106