தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பிரதமர் இணக்கம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, February 11th, 2021

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காக, தற்போதுள்ள சில தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தேர்தலில் வாக்காளிக்க முடியாமல்போன தரப்பினருக்காக, முன்கூட்டிய வாக்களிப்பு முறைமையுடனான புதிய தேர்தல் சட்டத் திருத்தம் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

அதேபோன்று வைத்தியத்துறை மற்றும் ஊடகத்துறையினருக்கு, பல்வேறு பணிகளின் காரணமாக குறித்த தினத்தில் வாக்களிப்பில் ஈடுபடுவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவானதாகும்.

அவர்கள் முன்கூட்டியே வாக்களிப்பில் ஈடுபடும் வகையில், வாக்களிப்பு முறைமையில் திருத்தம் மேற்கொள்வதன்கான செயன்முறைகள் கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்டு வந்தன.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தேர்தலுக்காக பெருமளவு பணம் செலவு செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படுவது.

அத்துடன் 18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு, அந்த வயது பூர்த்தியடைந்த உடனேயே, வாக்கை பயன்படுத்துவதற்கான சட்டமும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டியுள்ளமையினால், அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106