வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை கட்டியெழுப்புவதற்கு சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – யாழ்ப்பாணத்தில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உறுதி!

Monday, February 8th, 2021

வட மாகாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மக்களுக்கு கல்வி முக்கிய விடயமாகும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள், ஆசிரியர் பற்றாக்குறை, போக்குவரத்து பிரச்சினை, தேசிய பாடசாலைகளை இனங்காணல் உள்ளிட்டவற்றை கலந்துரையாடி சிறந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றுமு; அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது குறித்த முன்னேற்ற அறிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பீரிஷ் இந்த குறைப்பாடுகளை நிவர்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106