இம்மாத இறுதியில் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்!

Monday, February 8th, 2021

இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

குறித்த தடுப்பூசியை ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன். காரணம் என்னவென்றால் ஆசிரியர்கள் அவதான நிலையில் உள்ளனர். பலருடன் நாளாந்தம் பழகுகின்றனர்.

இதன் காரணமாக ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பை வழங்குவது நமது கடமையாகும். எனது கருத்தை நான் முன்வைத்துள்ளேன். லலித் வீரதுங்கவிடம் இது தொடர்பில் பேசியுள்ளேன்.

ஆசிரியர்களுக்கும் இதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று. பெப்ரவரி மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்கு கூறியுள்ளார் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106