நாட்டில் மீண்டும் மோதலை தூண்ட முயன்றவர்கள் யார்? – உடன் வெளிப்படுத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்து!

Friday, February 5th, 2021

நாட்டில் மீண்டும் மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

73 ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நான் நம்புகிறேன்.

இந்த அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் – ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

30 வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் அபிவிருத்தியாகி வருகின்றது. இந்த நிலையில், நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை அரசு வெளிப்படுத்தவேண்டும்.

ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. கடந்த காலத்தில் தலைவர்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கையை மறைத்தது போல இதனையும் மறைக்கவேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106