இலங்கையில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, February 2nd, 2021

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் செலுத்தப்படமாட்டாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவிக்கையில் –

இலங்கையில் கொரோனா தடுப்பூசியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசியில் பல சிக்கல்கள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி மாத்திரமே தீர்வாக உள்ளது..

உலகில் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் தயாரிக்கக் குறைந்தது 3 அல்லது 5 வருடங்கள் எடுத்துள்ளது ஆனால் குறித்த தடுப்பூசி தயாரிக்க ஒருவருடமே எடுத்துள்ளது இதனால் மக்களின் பாதுகாப்பு 5 மாதங்களா அல்லது அதற்கு மேல் செல்லுமா என உறுதியாகச் சொல்ல முடியாது. அத்துடன், குறித்த தடுப்பூசியில் நன்மை தீமை இரண்டும் உண்டு.

ஏனைய தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது கோவ்ஷீல்ட் தடுப்பூசியிலிருந்து வரும் பக்க விளைவுகளின் எண்ணிக்கை இலங்கையில் மிகக் குறைவு என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106