வேலணை பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணையில் போராட்டம் !
Monday, February 1st, 2021
பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வேலணை பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனுக்கு, இன்று திங்கட்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் வவுனியா- வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் எஸ்.சிவகரன், வேலணை பிரதேச செயலாளராக மாற்றப்பட்டும்இருந்தார்.
இந்நிலையில் புதிய பிரதேச செயலாளர் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில், மக்கள் பிரதேச செயலக வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிலையில் தமது நியாயமான கோரிக்கைக்கு தீர்வு தரவேண்டும் என குறித்த போராட்டக் காரர்கள் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் இன்றையதினம் ஒன்று கூடி தமது எரிர்ப்பை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106