வென்றது அராலி சரஸ்வதி!
Friday, August 5th, 2016
சுன்னாகம் கிழக்கு அம்பாள் விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த விளையாட்டு விழாவில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற் இந்தச் சுற்றுப்போட்டியில் 10 அணிகள் பங்குபற்றின. முதற்சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் நடைபெற்று தொடர்ந்து அரையிறுதி, இறுதி என நடத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற இறுதிப்போட்டியில்அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி அணி மோதியது. இப்போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 17:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
Related posts:
கரப்பந்தாட்டம்: நீர்வேலி ஐக்கிய அணி வெற்றி !
வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி முடிவுகள்
ஒலிம்பிக் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்ட சானியா!
|
|
|


