தடுப்பூசி ஏற்றப்பட்டதையடுத்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்!
Saturday, January 30th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
இன்று காலை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியிலும் குறித்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள சுகாதார சேவையாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதார சேவையாளர்கள் உட்பட 3,000 பேருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டெங்கு நோயினால் 269 பேர் உயிரிழப்பு!
இலஞ்ச ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதியின்வேண்டுகோள்!
சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபட...
|
|
|


