கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் கோரிக்கை!
Saturday, January 30th, 2021
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மட்டுமே மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக திறப்பது குறித்து கலந்துரையாடப்படுவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வர்த்தமானி!
ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு - பொருளாதார மற...
|
|
|


