ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !
Friday, January 29th, 2021
ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனவரி 31 ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுல் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் சட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சாதாரண தரம் கூட சித்தியடையாதொருக்கு விளையாட்டு ஆலோசகர் பதவி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
எதிர்வரும் 1 ஆம் திகதிமுதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க திட்டம் - சுகாதார அமைச்சர் கெஹெலிய ர...
மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்டாருக்கு...
|
|
|


