உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவிப்பு!
Sunday, January 24th, 2021
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உயர்தர வகுப்புக்களை ஜூலை மாத்ததில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற வேண்டிய கல்விப் பொதுத் தாரதர பத்திர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டிருக்கின்றது. எனினும், எந்தவொரு பாதிப்பும் மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் சிறுவர் வன்முறை 8 சதவீதத்தினால் அதிகரிப்பு - யாழ்.அரச அதிபர் தகவல்!
சுயநலன்களுடன் செயற்படாது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்படுங்கள் - யாழ். பல்கலை ஜனநாயக ஊழ...
ஐந்து நாள்கள் விசேட விஜயம் – சீனா சென்றடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன!
|
|
|


