இலங்கை 200 ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!
Saturday, January 23rd, 2021
இலங்கை ரூபாய் மீதான அழுத்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்ககமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 194.31 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 199.18 ஆக பதிவாகி உள்ளது.
எனினும் இலங்கை வர்த்தக வங்கிகள் சிலவற்றின் நாணய மாற்று வீதத்திற்கமைய ரூபாய் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரு வாரங்களில் 1,000 ரூபாய் சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியாகும் - நாடாளுமன்றில் பெருந்தோட்டத்துற...
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் - சுகாதார அமைச்சு அறிவிப...
எக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீட்டைக் கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை!
|
|
|


