அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடித் தீர்வு!

Tuesday, January 19th, 2021

அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமைபோன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முன்பதாக அல்லைப்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஒருவர் அண்மையில் இந்திய கடலோர காவற்படையால் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இப்பகுதியின் கடற்றொழில் நடவடிக்கைகளை கடற்படையினர் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக யுத்த காலங்களில் நடைமுறையில் இருந்த பாஸ் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என அப்பிரதேச கடற்படை அதிகாரியால் தொழிலாளர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டுவந்ததாகவும் தெரிவித்து குறித்த பகுதி தொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இந்நிலையில் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த பிரதேச கடற்படை அதிகாரிகளுடன் விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவ்வாறான நடைமுறைகளை உடனடியாக இல்லாது செய்து அல்லைப்பிடட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்...
மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – ...
கடந்த முப்பது வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த காணிப்பிரச்சினையை மூன்றே வாரங்களில் தீர்வைப் பெற்றுத்தந...

எம் வசம் கிடைக்கும் உள்ளூராட்சி சபைகள் ஊர் பிரமுகர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையின் ஆலோசனைகள் பெற்றே நிர...
தேசிய ரின் மீன் உற்பத்தி நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது – சபையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
மன்னார் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...