நிபா வைரஸ் தொடர்பில் அதி தீவிர கண்காணிப்பில் இலங்கை!

Friday, January 15th, 2021

உலக நாடுகள் சிலவற்றில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த வைரஸ் தொடர்பில் இலங்கை தீவிரமாக கண்காணித்துவருவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பொது பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் தொடர்பில் ஊடகங்கமொன்றுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  இது தொடர்பில் அவர் பேசியதாவது,

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் நிலைமைகளை கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறித்த வைரஸ் தொடர்பான எந்தவொரு தகவலையும் உலக சுகாதார நிறுவனம் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று நோயியல் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு ஆகியவை பிற நாடுகளில், குறிப்பாக பிராந்தியத்தில் வைரஸ்கள் பரவுவதால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து வருகின்றது.

அவை சர்வதேச சுகாதார விதிமுறைகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு மைய புள்ளியாகும். மற்ற நாடுகளில் நோய் பரவுவதை அவை கண்காணிக்கின்றன.

எந்தவொரு வைரஸிலிருந்தும் இலங்கைக்கு அச்சுறுத்தல் இருந்தால் அது குறித்து தொற்று நோயியல் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு தெரிவிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி அறிவிப்பு...
எரிபொருள் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு - உடனடி நடவடிக்கை குறித்து நிதி அமைச்சின் அறிவிப்பு!
சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வெளியானது அத...