நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் திட்டமிட்டு செயலல்ல – விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவிப்பு!
Thursday, December 31st, 2020
அண்மையில் கொழும்பு – புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் என்பதற்கான சாட்சிகள் எதுவும் இல்லை என குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசாரணைக்கு குழு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அத்துடன்குறித்த தீ அனர்த்தம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த தீப்பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் என்பதற்கான சாட்சிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுற்றலா பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி!
கொரோனாவின் தாக்கம் அதியுச்சம் : ஒரு மாதம் நீடிக்கலாம் ஊரடங்கு - எல்லாம் மக்களின் கைகளிலேயே தங்கியிரு...
தேர்தலை ஒத்திவைப்பது தமது கட்சியின் கொள்கையல்ல - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தெரிவிப்பு!
|
|
|


