வடமராட்சி, கரணவாய் பகுதியில் வாள்வெட்டு – பெண் உட்பட மூவர் காயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!
Tuesday, December 29th, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி, கரணவாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற குறித்த சம்பவத்தில் கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்திரமோகன் சஜிந்தன் , 55 வயதுடைய சண்முகம் சிவஞானசுந்தரம், 35 வயதுடைய தேவராசா ரஞ்சிதா ஆகியோரே வெட்டுக் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்ணிற்கு உடலின் பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனி மனித உயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுதொகைஅதிகரிப்பு!
இலங்கையின் மிகவும் வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்!
சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 61 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெ...
|
|
|


