புதிய அரசமைப்பின் பின்னரே மாகாணசபைத் தேர்தல் – அமைச்சர் சரத்வீரசேகர!
Sunday, December 27th, 2020
புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைத் தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
அஹன்கமவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
மாகாண சபைகள் குறித்த எனது கருத்தினை நான் பலமுறை வெளிப்படுத்திவிட்டேன். ஒருநாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனால் ஒன்பது மாகாணங்களிலும் வெவ்வேறு சட்டங்கள் காணப்பட முடியாது. தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக புதிய அரசமைப்பினை உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை பிற்போடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106