வடமாகாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவுறுத்தல்!
Thursday, December 17th, 2020
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.
Related posts:
இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது - ருவன் விஜயவர்தன!
ஜனவரிமுதல் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்!
நாடாளுமன்றத் தேர்தல் - பல அரச திணைக்களங்கள் இன்றும் நாளையும் சேவைகளை மேற்கொள்ளாதென அறிவிப்பு!
|
|
|


