ஜனவரிமுதல் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்!

Sunday, December 27th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேருந்து சேவையை புதிய ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றால், இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேருந்து சேவையை சுகாதார பரிந்துரைகளின் கீழ் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாகி வருவதால் சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் - சுகாதார சேவை...
மின்கட்டண உயர்வு குறித்து 3 நாட்களுக்குள் தீர்மானம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை - உடன் நடைமுறைக்கு வருவதாக வேலணை பிரதேச சபை அறி...