மேலும் 511 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
Wednesday, December 16th, 2020
கொரோனா பரவலை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில் இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 511 பேர் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 140 பேர் டுபாயிலிருந்தும், 137 பேர் கட்டாரிலிருந்தும் நாடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நாடு திரும்பிய அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 531 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது ...
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை !
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...
|
|
|


