பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை – பொலிஸார் அறிவிப்பு!
Wednesday, December 16th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒரு அங்கமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது, பேருந்துகளில் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன் பேருந்துகளில் ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, பொலிஸ்மா அதிபருக்கு விசேட அறிவுறுத்தல் பத்திரமொன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மகிழ்ச்சியளிக்கின்றது - கிளி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவி...
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது!
|
|
|


