எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது!
Thursday, February 20th, 2025
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
00
Related posts:
புதிய பேருந்து கட்டணம் இன்று வெளிவரும்?
உலக டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம்!
இலங்கை ஒரு நாள் குழாம் அறிவிப்பு - நாளை ஆர். பிரேமதாஸ மைதானத்தில் மோதல்!
|
|
|


