திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதி விபத்து!
Wednesday, August 3rd, 2016
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது.
துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எமிரெட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் தீ பிடித்ததில் அதன் வால் பகுதி முற்றிலும் எரிந்துவிட்டது.
கடினமான நிலையிலே விமானம் தரையிறங்கியது, தரையிறங்கியதும் விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியது என்று விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. விமானம் மோதியது என்றதும் சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் பயணிகள் அனைவரையம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
சீனாவின் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்!
ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு துருக்கியில் தடுப்புக் காவல்!
அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து: வடகொரியாவில் 200 பேர் வரை பலி!
|
|
|


