சீனாவின் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்!
Monday, June 13th, 2016
சீனாவின் புடோங் சர்வதேச விமான நிலையத்தில் வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் இருந்த சோதனை சாளரம் அருகே நாட்டு வெடிகுண்டு போல் தோன்றும் ஒன்று வெடித்ததாக செய்திகள் தெரிவித்தள்ளன.
இந்த வெடிகுண்டு ஏன் வெடித்தது, யாரால் வெடிக்க வைக்கப்பட்டது போன்ற விபரங்கள் எதுவும் தெரிவியல்லை.2013ல், பெய்ஜிங் விமான நிலையத்தில், சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஒருவர், தனது தனிப்பட்ட குறைகளை முன்னிலைப்படுத்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்தார். இதில், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.



Related posts:
சிகா வைரஸ்தாக்கம்: போர்டோரிகோவில் அவசர நிலை அறிவிப்பு!
நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்!
கொரியதீவகற்ப அமைதி முடிவுக்கு வருவதற்கு சீனா ஆதரவு!
|
|
|


